Categories
உலக செய்திகள்

இனி ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு செல்வதை இனி தலிபான்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக இனி காபூல் விமான நிலையம் செல்வதை தலிபான்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாடுகளுக்கு செல்ல தற்போது காபூல் விமான நிலையத்திலிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுமக்கள் அவர்களுடைய இல்லத்திற்கு திரும்புமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுடன் ஆப்கன் பெண்மணிகள் அவர்களுடைய வேலையை தொடர்ந்து செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |