தாய்லாந்தில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பான பிரதமர் செய்தியாளர் மீது சானிடைசரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக 3 அமைச்சர்கள் போர்க்கொடி காட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியின் போது போராட்டத்தை நடத்தினர். இதனால் அந்நாட்டு நீதிமன்றம் அந்த 3 அமைச்சர்ளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பிப்ரவரி மாதம் 3 அமைச்சர்களையும் பதவியை விட்டு நீக்கி அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தாய்லாந்தில் வழக்கமான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதன்பின் கூட்டம் நிறைவடைந்ததும் செய்தியாளர்கள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பேசினார்கள் .அப்போது செய்தியாளர்களின் ஒருவர் 3 அமைச்சர்களை நீக்கியது குறித்தும் அமைச்சரவையை மாற்றி அமைப்பதை குறித்தும் கேட்டார்.
இதனால் கோபமடைந்த பிரதமர் அங்கு இருந்த மேஜை மீது உள்ள சானிடைசர் எடுத்து செய்தியாளர்களின் மீது தெளிக்க தொடங்கினார் .ஆகையால் அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் அவர் மீது மிகுந்த கோபம் கொண்டர். இச்சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.