செய்தியை வாசித்து முடித்தவுடன் செய்தி வாசிப்பாளர் கதறியழுத சம்பவமும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நெகிழ வைத்துள்ளது.
வங்காளதேசத்தில் செய்தி ஊடகத்தில் தாஷ்னுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்களன்று சர்வதேச அளவில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது வங்கமொழி தொலைக்காட்சியில் போய்சாக்கி நியூஸ் சேனலில் தாஷ்னுவா காலையில் செய்தி வாசித்து அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆடிஷன் மூலம் தேர்வாகி பல பயிற்சிக்குப் பின்னர் சிறப்பான முறையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார் .
அவர் செய்தி வாசித்த பிறகு திடீரென கதறி அழுதுள்ளார் அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து தாஷ்னுவா கேட்டபோது இது ஆனந்தக் கண்ணீர் என்று கூறியுள்ளார். அதன் பிறகு தாஷ்னுவா இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் அனைத்தும் எளிதில் கிடைப்பதில்லை. பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி அவரவர்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற வேண்டிய நிலைமை உள்ளது. நான் ஒரு திருநங்கை என்பதால் வளரும் பருவத்தில் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததுண்டு .
இந்த சமுதாயம் என்னை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை நான் அடைந்த அவமானங்களும் நிராகரிப்புகளும் பெருமளவில் இருந்தது. ஆனால் அனைத்து இன்னல்களையும் தாண்டி நான் இன்று சாதனை படைத்ததாக ஆனந்தம் அடைகிறேன். எங்களை இந்த சமுதாயம் பார்க்கும் தப்பான கண்ணோட்டத்தில் இருந்து மாற்றம் பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தாஷ்னுவா அனன் ஷிஷிர் தற்போது இந்த சமுதாயத்தில் “தடை அதை உடை என்று சரித்திரம்” படைத்துள்ளார் .இது அனைத்து திருநங்கைகளுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாள் தாஷ்னுவாக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார் .