பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் தீயணைப்பு துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி வெள்ளம், அபாய காலங்கள் மற்றும் பருவமழையால் ஏற்படும் பேரிடர் வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தாங்கள் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு தங்களையும், குழந்தைகளையும் முதியோர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது என்று நடைபெற்றது.
அப்போது தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையம் அலுவலர் ஆனந்தி தலைமையில் பணியாளர்கள் பாதுகாப்பு ஒத்திகையை பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர். இதில் திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.