சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த 52 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகின்ற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அக்ரஹாரம் இந்திரா நகர், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அனுமதி இல்லாமல் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.