Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீஸார்…. அடித்து பிடித்து ஓடிய 4 பேர்…. சோதனையில் தெரிந்த உண்மை….!!

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 1¾ கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டாம்பாளையம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹேமமாலினி மற்றும் சக காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 மோட்டார் சைக்கிளில் உள்ளவர்கள் காவல்துறையினரை கண்டதும் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 4 மோட்டார் சைக்கிளையும் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 1¾ கிலோ கஞ்சா இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |