ரோந்து பணியின் போது 40 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அந்த நபர் அனுமதியின்றி 40 மதுபாட்டில்கள் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது அந்த நபர் நத்தகுளம் பகுதியில் வசிக்கும் பெரியண்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு பெரியண்ணன் கையில் வைத்திருந்த 40 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெரியண்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.