Categories
தேசிய செய்திகள்

மும்பையில் ரூ.17.25 லட்சம் மதிப்புள்ள முக கவசங்கள் பறிமுதல்: பதிக்கிவைத்த நபர் கைது!

மும்பையில் முகமது மீராஜ் இக்ரமுல் ஹக் என்பவரிடம் இருந்து பதுக்கிவைக்கப்பட்ட 57,500 முகமூடிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த முக கவசங்களை இவர் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள முகமூடிகளின் மதிப்பு சுமார் 17.25 லட்சம் இருக்கும் என போலீசார் கூறியுள்ளர். இதையடுத்து அந்த நபர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பசிக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 117 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1135 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மும்பையில் மட்டும் 696 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரில் வெளியே வரும் மக்களை கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் பதுக்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரூ.17.25 லட்சம் மதிப்புள்ள முகமூடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |