மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த புகையிலையை பறிமுதல் செய்ததோடு 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலவநத்தம் தெற்குப்பட்டி கிராமத்தில் அத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிலேயே புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அத்தியப்பனின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது மூட்டை மூட்டையாக புகையிலையை பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் புகையிலையை பறிமுதல் செய்ததோடு அத்தியப்பன் மற்றும் அவரின் மகனான ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து காவல்துறையினர் அவரிடமிருந்த 9 ஆயிரம் ரூபாய் மற்றும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்துள்ளனர்.