Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது மகளான சித்ரா என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த 3-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ ராஜேஸ்வரி மீது பற்றி எரிந்தது.

இந்நிலையில் ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Categories

Tech |