Categories
சேலம் மாநில செய்திகள்

1/2 கி.மீ க்கு முன் வரிசை தொடக்கம்…. டோக்கன்க்கு ஒரு FULL தான்…. அசத்தும் சேலம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் டோக்கன் ஒன்றிற்கு ஒரு ஃபுல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும், அதிக கூட்டங்கள் நிலவும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில்,

அதிக கூட்டம் கூடும் மதுபான கடைகளுக்கு வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் அதிக கூட்டம் கூடும் மதுபான கடைகளை தமிழக அரசு திறக்கச் சொல்லி இருப்பது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து பலரும்  கண்டனங்களை தெரிவித்து வரும் சூழ்நிலையில், மறுபுறம் தமிழக காவல்துறையினர் இந்த சமயத்தில் கொரோனா பரவிடக்கூடாது என்பதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன் டோக்கன் வழங்கப்படும். வரிசையும் அங்கிருந்து தொடங்கப்படும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் டோக்கன் கொடுத்து  டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கி கொள்ளலாம் ஒரு நபருக்கு ஒரு புல் மட்டுமே வழங்கப்படும் என்று காவல்துறையினர் மற்றும் ஓமலூர் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Categories

Tech |