Categories
மாநில செய்திகள்

யாருமே எதிர்பாக்கல…. திடீர் விசிட் அடித்த முதல்வர்… அதிர்ந்துபோன காவல் நிலையம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று தொழிலதிபர், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தருமபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு பதிவு விசாரணை கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வின் போது ஐஜி சுதாகர், ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் காவல் நிலையத்தில் இருந்தார்கள்.

Categories

Tech |