தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். www.bcmbcm.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த திட்டங்கள் குறித்து விவரங்களும், விண்ணப்பம் படிவமும் உள்ளது. மேலும் 0427-2451333 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.