சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வானிலை ஆய்வு மையமானது வெப்பச்சலனம் காரணமாக சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாலை 3 மணியளவில் வானத்தில் மேகமூட்டமாக இருந்தது. அதன்பிறகு லேசாக மழைச் சாரல் விழுந்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
இதனையடுத்து இரவு இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து இரண்டு மணி நேரமாக பெய்துள்ளது. மேலும் நள்ளிரவிலும் லேசாக மழை துளி விழுந்து கொண்டே இருந்துள்ளது. இவ்வாறாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.