5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் பொது முடக்கம் போடப்பட்டது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. 10 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் 10 மற்றும் 11 மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடைபெறும், அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 5 முதல் 8 மாணவர்களுக்கு இந்த வருடம் தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆலோசனை கூறிய பிறகே இதுகுறித்து முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.