Categories
மாநில செய்திகள்

5 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட…. மிக முக்கிய தகவல்…!!

5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள்  திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மற்ற வகுப்புகளுக்கு எப்போது பள்ளி திறக்கும் என்றும், தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |