இந்திய ரயில்வே நிர்வாகம் உற்பத்தி துறையில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 21 ஆர்ஆர்பி தேர்வுகளில் 17 தேர்வுகளின் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் செயல் இயக்குனர் அமிதாப் ஷர்மா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேயில் உள்ள 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்.
அதன் பிறகு அனைத்து தேர்வுகளின் முடிவுகளையும் தனித்தனியாக பெற ரயில்வே வாரியம் தயாராகியுள்ளதால், அதிக அளவில் வேலை வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். இந்நிலையில் ஒரு தேர்வின் ரிசல்ட் வெளியாகும் போது ஒரு தேர்வர் பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெறுவதால் பல்வேறு நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அதன்பிறகு 5-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் நவ. 3-வது வாரத்திற்குள்ளும், 2-வது வாரத்திற்குள் சான்றிதழ் சரிபார்ப்பும், மருத்துவ பரிசோதனையும் நடைபெறும். அதன்பின் ஜன. 3 வாரத்திற்குள் பணியில் சேரலாம்.
இதனையடுத்து 4-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 2-ம் வாரத்திற்குள்ளும், பிப்ரவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதன்பின் 4-வது வாரத்துக்குள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். மேலும் 3-ம் நிலை தேர்வுக்கான அனைத்து முடிவுகளும் மார்ச் மாதத்துக்குள் வெளியிடப்படுவதோடு, மற்ற நடவடிக்கைகளும் அதே மாதத்தில் முடிவடைந்து வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.