அங்கும் இங்கும் அலைந்து செய்யும் தொழில்களை விட ஒரே இடத்தில் இருந்து செய்யும் தொழில்கள் பெண்களுக்கு சரியானதாக அமையும். அவர்கள் என்னென்ன தொழில் செய்யலாம் என்பது பற்றிய தொகுப்பு
பொதுவாக பெண்கள் சுய தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அது உற்பத்தி சார்ந்ததாக இருப்பது நல்லது. தொழில் நடத்தும் வழி முறை, தொழில் செய்யும் இடம் அமைத்தல், மின் வசதி, நீர் வசதி, அத்தியாவசிய சாமான்கள், பணியாளர்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
உணவு பொருட்கள்
பெண்கள் தொழில் தொடங்கும்போது சுயமாக ஊறுகாய், சாம்பார்பொடி, சிப்ஸ், அப்பளம், சீவல் போன்றவற்றை தயாரிப்பதில் ஈடுபடலாம். இதற்கு குறைந்த முதலீடு இருந்தால் போதுமானது.
வீட்டிற்கு தேவையான பொருட்கள்
பினாயில், வாசனை பத்தி, சோப்பு ,பல்பொடி, பாய் ,கூடை போன்றவற்றை செய்யும் தொழிலையும் மேற்கொள்ளலாம் .
துணி வகைகள்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை தயார் செய்யலாம். அதோடு டெய்லரிங் தொழிலும் மேற்கொள்ளலாம்.
ஸ்டேஷனரி பொருட்கள்
குழந்தைகளுக்கு தேவைப்படும் சாக்பீஸ், பென்சில் ,நோட்புக் போன்றவற்றை தயார் செய்யும் தொழிலை பெண்கள் மேற்கொள்ளலாம்.
புதிதாக தொழில்களை செய்ய பெண்கள் ஆர்வமுடன் இருந்தால் அதற்கான ஆலோசனைகளை மத்திய-மாநில அரசுகள் வழங்குவதோடு தொழில் அமைச்சகம் மூலமாக உரிய பயிற்சியும் கொடுத்து வருகிறது.