செல்ஃபீ எடுத்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மூர்த்தி நேப்பியர் பாலத்தின் மீது நின்று செல்பி எடுத்துக் போது கால் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கூவம் ஆற்றில் தற்போது நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் மூர்த்தியை எந்தவித ஆபத்துமின்றி மீட்டன.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இளைஞர்களிடத்தில் செல்ஃபி மோகம் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆபத்தான பகுதிகளில் சென்று செல்பி எடுப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும் என்றும் மூர்த்திக்கு நடந்த இந்த விபத்து உதாரணமாக அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் மூர்த்திக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
.