நீர்வீழ்ச்சியின் அருகிலேயே நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்ற போது கை தவறி விழுந்த செல்போனை பிடிக்கச் சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சோக கதை.
வெற்றியோ தோல்வியோ, நல்லதோ கெட்டதோ வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் செல்பி எடுக்கும் பழக்கம் வாலிபர்கள் மத்தியில் பெருகி வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்த வாலிபர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ளது. இந்த லோதி நீர்வீழ்ச்சிக்கு பொழுதைக் கழிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 5 பேர் சென்று உள்ளார்கள். அப்போது அவர்களில் 19 வயதுடைய சச்சின் என்ற வாலிபர் செல்பி ஆர்வத்தால் நீர்வீழ்ச்சி மேல் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் அவர் கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்து நீர்வீழ்ச்சியின் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டது.
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட செல்போனை பிடிப்பதற்காக சச்சின் நீர்வீழ்ச்சி வழியாக ஓடி உள்ளார். சச்சின் நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடித்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது கால் தவறி விழுந்த சச்சின் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சுழற்சியில் சிக்கி காணாமல் போய்விட்டார். இதனையடுத்து கூச்சலிட்ட சக நண்பர்கள் வெகு நேரம் தேடியும் சச்சின் காணவில்லை. இதனையடுத்து சச்சினை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சச்சினின் உடலை இன்று கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விலையுள்ள பொருட்களுக்காக விலைமதிப்பில்லாத உயிரை விட்ட வாலிபர்யின் செயல் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும். இவையெல்லாம் வருங்கால தலைமுறையினர் சமுதாய அக்கறையோடு புரிந்து கொள்வார்கள் என நம்புவோம்.