Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை நண்பர்களுடன் செல்ஃபி …. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை செம்பருத்தி சீரியல் நாயகி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள்தான் பொழுது போக்காக உள்ளது.அதிலும் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா தனது மிகச் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா அவ்வபோது தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிந்து ஹேமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Categories

Tech |