Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டை விற்க….. அக்காள் மறுப்பு….. விரக்தியில் டீ கடைக்காரர் தீ குளித்து தற்கொலை…..!!

விழுப்புரம் அருகே சொத்துக்காக டீ கடைக்காரர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை அடுத்த வி.தொட்டி  தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்திவருகிறார். இவருக்கும் இவரது அக்காவான மும்தாஜ் என்பவருக்கும் பொதுவான வீடு ஒன்று சொத்தாக உள்ளது.

இதனை அப்துல் ரசாக் விற்கப் போவதாக மும்தாஜிடம்  தெரிவிக்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனை விற்க முயலும் போதும் அதற்கு தடையாகவும் அவர் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அப்துல் ரசாக் நேற்றைய தினம் காலை மும்தாஜின் மல்லிகை கடை முன்பு நின்று மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீயிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஈரத்துணியை அவர் மீது போர்த்தி, அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி டீக்கடைக்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |