யூடியூபில் ‘செல்லம்மா வீடியோ பாடல்’ புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ” டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் நிறைந்து காணப்பட்டது.
இதனையடுத்து, இந்த படத்தின் ‘செல்லம்மா’ வீடியோ பாடல் யூடியூபில் சமீபத்தில் வெளியானது. தற்போது, இந்த பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. மேலும், ட்ரெண்டிங்கிலும் நம்பர் 1 இடத்தில் இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.