Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பறிக்க முயற்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமிதா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு பணி முடிந்தவுடன் பேருந்தில் ஏறி தனது நிறுத்தம் வரவும் செல்போனில் பேசிக் கொண்டவாறு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று நபர்கள் அவரின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் சுமிதா தனது செல்போனை பத்திரமாகப் பிடித்துக்கொண்டதினால் அதனைப் பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். அதன்பின் எழுந்த மூன்று நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அந்நேரம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மர்ம நபர்களை விரட்டிப் சென்றதில் 2 பேரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் கார்த்திக் மற்றும் அரவிந்தன் என்பதும் தப்பிச் சென்றவர் சூர்யா என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் கார்த்திக் மற்றும் அரவிந்தனை காவல்துறையினர் கைது செய்து தப்பி ஓடிய சூர்யாவை வலைவீசி தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து ஏலகிரி மலை பொன்னேரி கூட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஏற்கனவே சுதாவிடம் செல்போன் பறிக்க முயன்ற வழக்கில் தப்பி ஓடிய சூர்யா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

Categories

Tech |