Categories
டெக்னாலஜி லைப் ஸ்டைல்

செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் உருவாகும் தீமைகள்..!!

செல் போன் எவ்வளவு தீமையை நமக்கு அளிக்கின்றது தெரியுமா..?உங்களுக்கு.. அதனால் நம் உடலிலும் பாதிப்பு, மனஅளவிலும் பாதிக்கப்படுகிறோம், அதன் கதிர் வீச்சானது பல வழிகளில் பாதிப்புக்குள்ளாகிறது.

கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்ஃபோனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல் நிலையைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கல்வியில் பாதிப்பு: 

செல்ஃபோனில் SMS அனுப்புவது பாட்டு சினிமா போன்ற மல்டிமீடியாப் பயன் பாட்டால் மாணவர்களது படிப்பில் கவனம் சிதறுகிறது.

இதை உணர்ந்த தமிழக அரசு , பள்ளிக்கூடங்களில் செல் போன் தடை செய்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனாலும் பெற்றோர்களின் நான்கு கண்ணும் பிள்ளைகளிடம் தேவை.

கலாச்சாரப் பாதிப்பு:

` இன்று செல்ஃபோனுடன் காமிராவும் இணைந்து பல பாதிப்புகள் உண்டாக்குகிறது. பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் அனுமதியின்றி படம் எடுப்பது. அதை பலருக்கு அனுப்புவது , ஆபாசமாகப் படம் எடுப்பது மிரட்டுவது. ஆபாசப் படங்களை பரப்புவது.

என பல செல் குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது. செல்ஃபோனில் பேசப்படும் எந்த பேச்சும் எதிரில் இருப்பவரால் என்னேரமும் பதிவு செய்யப்படலாம் . சில வேளை நமக்கு எதிராகக் கூடப் பயன் படுத்தப்படலாம். என்வே யோசித்து சுருக்கமாக பேசுவதே எப்போது நல்லது.

விபத்து : 

செல்ஃபோனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, சாலையை கடப்பது எவ்வளவு ஆபத்தானது என சொல்லத் தேவையில்லை. தினந்தோறும் பெருகிவரும் விபத்துக்களே சாட்சி.

ஆய்வுகளும் இதை புள்ளி விபரங்களாகக் காட்டுகிறது.இஸ்திரி செய்து கொண்டிருக்கும் போது சமைத்துக் கொன்டிருக்கும் போது வரும் கால்களில் மூழ்கிப்போவது கருகி நாற்றம் வந்தாலும் தெரியாமல் போய்விடும்.

தகவல் திருட்டு:

எல்லா இடங்களிலும் இப்போது செல்ஃபோன் கடைகள் நிறைந்துள்ளன. அங்கே செல் ஃபோனில் வீடியோ மற்றும் ரிங் டோன் ஏற்றுவதற்காக மொபைலை கொண்டு போய் கொடுக்கிறார்கள்.

ஆனால் ஒரு கிளிக் செய்தால் உங்கள் ஃபோனில் உள்ள எல்லா தகவல்களும் அவர்கள் கம்ப்யூட்டருக்குப் போய் விடும்.அதில் உங்கள் ஃபோன் மெமரியில் உள்ள எல்லா கான்டாக்ட் நம்பர்கள், உங்கள் பெர்சனல் போட்டோக்கள்.குடும்ப அங்கத்தினர் ஃபோட்டோக்கள்.

உங்கள் மெசேஜ் பாக்ஸில் உள்ள முக்கியத் தகவல்கள். வேறு சேமித்து வைக்கப்பட்ட முக்கிய எண்கள் பாஸ்வேர்டுகள் எல்லாம் காப்பி செய்யப்பட்டு விடலாம். முக்கியமாக உங்கள் செல் ஃபோனையோ சிம் கார்டையோ பிறர் உபயோகிக்க ஒரு போதும் கொடுக்காதீர்கள். பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

செல்ஃபோனிலிருந்து வெளிப்படும் ஒலியின் அளவு அதிகம் உபயோகப் படுத்துபவர்களது காது பாதிப்படையச் செய்கிறது என்றும் காதுக்கு அருகே வைத்துப் பேசும்போது செல்ஃபோனிலிருந்து வெளிப்படும் அலைகள் மூளைக்கு செல்லும் மெல்லிய இரத்தக் குழாய்களை சேதப்படுத்துகிறது என்றும் ஒரு ஆராய்ச்சித் தகவல் இணையத்தில் வெளியாகியிருந்தது.

எப்படியானாலும் இதுபற்றிய முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் தெரிய சிறிது காலம் எடுக்கலாம். அதுவரை செல்ஃபோனை தேவைக்கு மட்டும் பயன் படுத்துவது ஆரோக்கியத்துக்கும் பாக்கெட்டுக்கும் நல்லது.

Categories

Tech |