செல்போனில் பேசியவாறு தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் ரயில் தண்டவாளத்தை செல்போனில் பேசிக்கொண்டு கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.