மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி போன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தின் பொது சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்தில் பொருட்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.அப்பொருட்காட்சியில் “பாகவத கதா” என்ற பாராயண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றன. இந்நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்துவதால் அந்த கிராமத்திலேயே 9 நாட்களா தங்கியுள்ளார் . பொருட்காட்சியில் 50 அடி உயர ராட்டினம் அமைக்கப்பட்டிருந்தது. ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பிரஜேந்திர சிங் யாதவ் செல்போனில் பேசிக்கொண்டிருந்த காட்சி வெளியாகிள்ளது.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இதனை கேலி செய்யும் வகையில் செல்போன் சிக்னலுக்காக அவர் ராட்டினத்தில் ஏறியுள்ளதாகவும் நெட்டிசன்கள் டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் இதுதானா?என்று கேலி செய்தும் மீம்ஸ்களை வெளியிட்டும் வந்துள்ளன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிரஜேந்திர சிங் யாதவ் அந்த கிராமத்தில் 9 நாட்களாக நான் தங்கியிருப்பதால் அங்கு உள்ள பிரச்சனைகளை கிராம மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அதிகாரிகளிடம் பேசி உத்தரவை பிறப்பிக்க நினைத்ததாகவும் அந்த கிராமம் மலைகளால் சூல பட்டுள்ளதால் செல்போன் சிக்கலே கிடைக்கவில்லை அதனால் ராட்டினத்தில் ஏறி பேசியதாகவும் கூறினார்.