இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சாணிக் காயிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் . இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
https://twitter.com/arunmatheswaran/status/1367699858136571906
மேலும் கடந்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காயிதம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இயக்குனர் செல்வராகவனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு இந்த புதிய போஸ்டரை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் .