இயக்குனர் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் தயாராவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் ரீமாசென் ,ஆன்ட்ரியா ,பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர் . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார் . 12ஆம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .
இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு
இதோ உங்கள் முன்னால் @dhanushkraja #a.o2 pic.twitter.com/4siF01hiJL— selvaraghavan (@selvaraghavan) January 1, 2021
இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என ரசிகர்கள் செல்வராகவனிடம் ஆவலோடு கேட்டு வந்து கொண்டிருந்தனர் . இந்நிலையில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ உருவாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் அறிவித்துள்ளார் . இதில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் இந்தப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் கூறியுள்ளார் . இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .