நடிகை குஸ்பு அவரது சகோதரர்களுடன் இணைந்து எடுத்த இளம் வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தி.மு.க. கட்சியோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார், பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அவரின் வீட்டில் கல்வீச்சு சம்பவம் என மறைமுகமான எதிர்ப்பின் செயல்பாடும் நடந்தது.
இக்காரணத்தினால் அவர் அரசியல் சார்ந்த பணிகளில் இருந்து விலகினார். அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2014ம் ஆண்டில் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்பொழுது இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பதவியில் உள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் அனைத்து திரை பிரபலங்களும் தங்களுடைய நேரத்தை பாடுவது, ஆடுவது, உடற்பயிற்சி செய்வது, சமைப்பது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வது மட்டுமின்றி தங்களது குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகின்றனர். அதனை அவர்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவு செய்து அவர்களின் ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து கொண்டிருக்கின்றனர்.
https://www.instagram.com/p/B_TpJe4AhdV/?utm_source=ig_embed
இந்நிலையில் இப்பொழுது ஊரடங்கின் காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள நடிகை குஸ்பு, அவரது சகோதரர் மூன்று பேருடனும் இணைந்து எடுத்த இளம்வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் அண்ணன்மார்களுடன் பாசமிகுந்த தங்கையாக காட்சியளிக்கிறார். மும்பையில் இருந்த நாட்களிலேயே எடுத்த அறிய புகைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். எனது சகோதரர்கள் மூவரும் என்னை விட மூத்தவர்கள். அவர்களின் அன்பால் நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.