Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ரீல் மகள் ராசி….. நாக சைதன்யாவுக்கு ஜாக்பாட் அடிக்குமா….? ஆவலில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

NC 22 Movie Latest Update About Two Celebrities Joined In The Movie | Venkat Prabu : 'என்சி 22 ' படத்தில் புதிதாக இணைந்த இரண்டு பிரபலங்கள் யார்..! விவரம் உள்ளே

கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இந்த படத்தில் பிரேம்ஜி, சரத்குமார், பிரியாமணி, சம்பத்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நாகசைதன்யா நடிப்பில் கடைசியாக வெளியான தேங்க்யூ, லால்சிங் சத்தா போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து நடிகை கீர்த்தி செட்டி ராசியான நடிகை என்ற பெயர் வாங்கி இருக்கிறார். இந்நிலையில், இவரின் ராசி இந்த படத்தை காப்பாற்றுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். உப்பேனா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் ரீல் மகளாக நடித்தவர் கிரித்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |