கார்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்து வருகிறது. இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது.
அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகர் கார்த்தி அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.