வளைகாப்பு புகைப்படத்தை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ”சரவணன் மீனாட்சி” சீரியல் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா . இவர்கள் 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு ‘மாப்பிள்ளை’ என்ற சீரியலிலும் நடித்தனர். இதனையடுத்து திருமணம் ஆகி 8 வருடங்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீஜா கர்பமாகியுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.