நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். சமீப காலத்தில் கீர்த்தி சுரேஷ் சற்று கிளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தான் வளர்க்கும் நாயுடன் எடுத்த கியூட் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். ”மை சன்” என நாயை அவர் குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/Ck8DlGOvf1h/