பிரபலமான மைக்ரோசாப்ட் கம்பெனியின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1995 அறிமுக விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பில்கேட்ஸ் தன்னுடைய நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அதன் பிறகு வீடியோவில் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடும் நிலையில் பில்கேட்ஸ் மட்டும் கூச்ச சுபாவத்தோடு ஸ்டெப் தெரியாமல் நடனம் ஆடுகிறார். இதனால் பில்கேட்ஸ் போடும் நடன ஸ்டெப்புகள் அவ்வளவாக தெரியவில்லை. மேலும் இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், 6.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதோடு, 7,000 லைக்ஸ் களையும் குவித்துள்ளது.
Microsoft Windows 1995 Launch Party 🕺🏻🖥 pic.twitter.com/3bzSVqSRVM
— lost in nature (@lostinnaturevid) September 29, 2022