தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர் இத்தாலி மற்றும் ரோம் நகரில் எடுத்துக்கொண்ட தனது சுற்றுலா புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
When in Rome… ❤️
📸 #rjmithun #rome #italy pic.twitter.com/CUTAhMCJjK— Manju Warrier (@ManjuWarrier4) December 25, 2022