தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிவடைந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை விடுமுறை தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ளார்.
அதன் பிறகு தசரா பண்டிகைக்காண விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியதால்தான் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பாக அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டு 6-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.