தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்குவதாக அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ஆங்காங்கே பட்டாசு கடைகள் அமைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் பணம் பரிசுப் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்களுக்குள் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் சுமார் 17 மாவட்டங்களில் இருந்து அரசு அலுவலகங்களிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூபாய் 19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 4,67,000 ரூபாயும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.