Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK போட்ட செம ஐடியா… சாப்பாடு டைம்ல பேசிய வைகோ… கூர்ந்து கவனித்த ஸ்டாலின்…!!

வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்று இருக்கிறது, அந்த மாநாட்டில் அண்ணன் வைகோ பேசுகிறார் என்றால்,  அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அவருக்கு நினைவிருக்கோ, இல்லையோ எனக்கு தெரியாது. அவர் எப்போதுமே கரெக்டா சாப்பிடும் நேரத்தில் விடுவார்கள். ஏனென்றால் கூட்டம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக,

மதிய நேரம் என்பதால்  ஒவ்வொருவரும் எழுந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள்,  மதிய நேரத்தில் தான் அண்ணன் வைகோ பேசுவார், அதனால் யாரும் எழுந்து கூடப் போக மாட்டார்கள் நான் உட்பட… அவர் ஒவ்வொரு முறையும் மாநாட்டில் பேசுவதற்கு பிறகு உடனடியாக அவருக்கு முதல் டெலிபோன்,  அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. முதல் டெலிபோன் செய்து அவருக்கு ரொம்ப உணர்ச்சியாக பேசுகிறீர்கள்,

மிகவும் வேகமாக பேசுகிறீர்கள், எங்களுக்கெல்லாம் மெய் சிலிர்த்துப் போச்சு என்று அவரிடத்தில் நான் பலமுறை சொன்னதுண்டு. நேரமில்லை பேசிக்கொண்டு இருக்கலாம். 56 வருடம் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச் சிறப்பாக, மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்கக் கூடிய தம்பி துரை ரவி அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமை கழகத்தினுடைய செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

Categories

Tech |