பிக்பாஸ் பிரபலம் சோம் சேகர் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது . இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டி வரை சென்ற சோம் சேகர் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இதில் பிக்பாஸ் பிரபலங்கள் ரியோ, சுரேஷ் தாத்தா, அர்ச்சனா, ஷிவானி ,பாலா, சம்யுக்தா, ஆஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் . இவர்களுடன் சோம் சேகர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் . தற்போது இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .