Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல்…. அசத்தலான ப்ரோமோ ரிலீஸ்….!!!!

சீரியல் நடிகை ஆலியா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதன் பிறகு இவர் விஜய் டிவி பக்கம் வந்தார். பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’ சீரியலில் இவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தது.

இதோ வெளியானது நடிகை ஆல்யா மானசாவின் புதிய தொடர் புரொமோ- இதுதான் சீரியல் பெயரா? | Alya Manasa New Serial Promo

இந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து ராஜா ராணி 2 சீரியலில் கமிட்டான இவர் பிரசவத்துக்காக பாதியிலேயே சீரியலில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து, கலந்த சில மாதங்களாக இவரின் புதிய சீரியல் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில், சன் டிவியில் இவர் புதிய சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியலுக்கு ‘இனியா’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த சீரியலுக்கான அசத்தலான ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/ClZB-71tU4B/

Categories

Tech |