14-வது ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 186 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் கே.எல்.ராகுல் 49 ரன்னில் ஆட்டமிழந்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் 22 ரன்கள் எடுத்திருந்தபோது ஐபிஎல் தொடரில் 3000 ரன்கள் பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 80 இன்னிங்சில் 3000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை கே.எல் ராகுல் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 75 இன்னிங்சில் 3000 ரன்கள் கடந்து முதலிடத்தில் உள்ளார்.