செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், 50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும்,
ஜாதி:
ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது வெட்கக்கேடாக உள்ளது. அவருடைய அரசியலுக்கு எந்த அடிப்படையில் ஜாதிக்கும் முக்கியத்துவம் தருகிறார் என்று தெரியவில்லை.
எம்.ஜி.ஆர்:
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், அம்மா அவர்களும் ஜாதியை பார்த்து யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள், கட்சியினுடைய விசுவாசம், உழைப்பை பார்த்து தான் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த அடிப்படையில் 1977இல் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்களை நியமிக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இடத்தில் என்னுடைய கோவை மாவட்ட எல்லாம் ”அப்போது பெரியார்” ஈரோடு, கோயமுத்தூர் எல்லாம் ஒரே மாவட்டம், அந்த மாவட்டம் ஆக இருக்கின்றபோது அங்கே இருப்பவர்கள்,
எழுந்து போங்க:
வந்தவர்கள் எல்லாம் கவுண்டவர்களை தவிர யாருக்கு கொடுத்தாலும் ஜெயிக்காது என்று சொன்னபோது புரட்சித்தலைவர் சொன்னது, எனக்காக கட்சிக்காக இந்த முகத்திற்கு தான் ஓட்டு போடுகிறார்கள். ஜாதிக்காக யாரும் ஓட்டு போடுவது இல்லை, அதனால் இங்கே ஜாதிக்கு வேலை இல்லை. எழுந்து எல்லோரும் செல்லுங்கள் என்று கூறிவிட்டு நான் யாரை வேட்பாளராக போடுகின்றேனோ அவர்களுக்கு போய் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டார். அந்த அடிப்படையில் தான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கவுண்டர்களை தவிர யாரும் வெற்றி பெறாத அந்த தொகுதியில் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த மரியாதைக்குரிய மருதாச்சலம் அவர்கள் வேட்பாளராக அறிவித்தார்.
நாடார் ஜாதி:
மேட்டுப்பாளையம் தொகுதியில் ஒக்கிலியர் சமுதாயம் அதிகம் என்று சொன்னபோது, அங்கு சாதாரண நெசவு செட்டியார் சிறுமுகை பழனிச்சாமியை வேட்பாளராக அறிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் கொங்கு மண்டலம் என்று சொல்லுவார்கள். அந்த திருப்பூரில் மலையாள சமுதாயத்தை சேர்ந்த திருப்பூர் மணிமாறன் அவர்களுக்கு வாய்ப்பை கொடுத்தார். அண்ணன் அரங்கநாயகம் அவர்கள் நிற்கின்ற போது கோவை மேட்டு தொகுதியில், இவர்கள் பழனிச்சாமி கவுண்டருக்கு 1974 இடைத்தேர்தல் கேட்கின்ற போது, புரட்சித் தலைவர் அவர்கள் அந்த 74 இடைத்தேர்தலில் அரங்கநாயகம் அவர்களுக்கு சாதாரண அந்த பகுதியில் ஒரு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு கோயம்புத்தூர் வாய்ப்பை கொடுத்தார்.
கண்டிப்பு:
அப்போது ஜாதி அடிப்படையில் பார்க்காமல் தொண்டர்களுக்காக கட்சிக்கு உழைத்தவர்களுக்காக வாய்ப்பை கொடுத்து எல்லோரும் வெற்றி பெற்றார்கள், தொடர்ந்து நான்கு முறை திருப்பூர் மணிமாறன் சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் ஜாதி வெறியை அடக்கியவர், ஒழித்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அப்படிப்பட்ட புனிதமான இந்த அண்ணா திமுகவில் செங்கோட்டையன் அவர்கள் இவ்வளவு கேவலமாக ஜாதி வெறியோடு நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது, வருத்தத்துக்குரியது. எதற்காக அவர் இப்படி பேசினார் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.