தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் தமன் வாரிசு படம் குறித்த ஒரு சூப்பர் தகவலை கூறியுள்ளார். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.