லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் ”தளபதி66” படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதனையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.