சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாதம் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கையை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022 செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 61.12 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அதனை போல இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் 2,47,98,227 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக செப்டம்பர் 30ஆம் தேதியன்று மொத்தம் 2.46 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் 4,46,675 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் மட்டும் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறை பயன்படுத்தி 4,98,351 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும் பயண அட்டை பயணச்சீட்டு முறை பயன்படுத்தி 38, 23,810 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிகளுக்கு 20% கட்டண தள்ளுபடி வழங்குகிறது. மேலும் மெட்ரோ ரயில்கள் மற்றும் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு தரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மற்றும் ரயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.