Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ஒன்னு சொல்லுங்க …. அதிமுக கேடுகெட்ட திராவிட கட்சி…. சரமாரியாக விமர்சித்த சீமான்….

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

முதலில் இந்த நாட்டில் இருந்து திமுக, அதிமுக கட்சி ஆட்சியில் இருந்து மீட்பது தான் முதலில் நாம் செய்ய வேண்டிய கடமை. அது ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை. ஜெயலலிதாவுக்கு ஏதேனும் தத்துவம் சொல்லுங்கள். அதிமுக என்றால் அது ஒரு கேடுகெட்ட திராவிட கட்சி தான்.

அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார் என்றால்…. மதிப்புமிக்க நம் உரிமையை சிலர் ரொட்டி துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது என்கிறார். இரண்டு ரொட்டித் துண்டுகளுக்காக மதிப்புமிக்க உரிமையை விற்கின்ற ஏழை வறுமை நிலையில், மானத்திற்கு உயிரை விட்ட ஒரு இன கூட்டத்தை, வைத்தது தான் இவர்கள் சாதனை. அறத்தின் வழி நின்று வாழ்ந்த ஒரு இன கூட்டம். அந்த அறத்தை கொலை செய்தது தான் 50 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சி. பாவம், புண்ணியம், தர்மம் எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள் என் இன மக்கள். இன்றைக்கு பாவம் என்றால் யாரு செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ஏனென்றால்… என் இன மக்களுக்கு இருந்த அற சிந்தனை கொலை செய்துவிட்டான் 50 ஆண்டுகளில்… என சீமான் கூறினார்.

Categories

Tech |