கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து உயர் கல்வித்துறை அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் அறிவிப்பில் தொடர்ந்து அரசாணை மற்றும் முந்தைய தேர்வுகளில் இருந்து எவ்வாறு மதிப்பெண் கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்புகளை உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முந்தைய செமஸ்டர் தேர்வுகலிருந்து 30வது விழுக்காடு மதிப்பெண்கள் இன்டர்ணல் மதிப்பெண்களில் இருந்து 70வது விழுக்காடு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் துணைபாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100 விழுக்காடு மதிப்பெண்களும் அகமதிப்பீடு மதிப்பெண்களிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேடு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முந்தைய தேர்வை எழுதாமல் விட்டு இருந்தால் அதாவது அரியர் வைத்திருந்தால் அந்த தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி திட்டத்தில் அகமதிப்பீடு இல்லாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி குறிய மதிப்பெண்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வுகளின் போது இந்த தேர்வுகளை எழுதி மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கொரோனா கடுமையாக உள்ள சூழலை கருத்தில் கொண்டு குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கி அவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.