பிரபல சீரியல் நடிகை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஆர்யன்.
இவரும் நடிகை ஷபானாவும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இந்நிலையில் நடிகர் ஆர்யன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவருடைய கையிலும் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், “அவள் ஆன்மாவுடன் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் எங்களுடைய கேமிஸ்டிரி குறையும்.
வெளிப்புற அழகும் மங்கிவிடும். ஆனால் ஆன்மா வயதுக்கு மாறானது, நித்தியமானது. அது தான் அன்பு வாழும் இடம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஆர்யன் மற்றும் ஷாபனாவிற்கு நிச்சயதார்த்தம் ஆகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.instagram.com/p/CSJa2UdDxc9/?utm_medium=copy_link