செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று செம்பருத்தி. ஆனால் தற்போது இந்த சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்ததால் தொடர்க்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஷபானா தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஸ்வாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை தான் நடிகை ஷபானா காதலித்து வருகிறார். அவர் தனது காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த அழகான காதல் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CTXkRYKvZFO/?utm_medium=copy_link